வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் தளர்த்தப்படுகின்றன!

30.03.2021 09:25:54

 

இங்கிலாந்தில் வீட்டிலேயே தங்கியிருக்கும் கொவிட் கட்டுப்பாடுகள் உத்தரவு முடிவுக்கு வருவதால், இரண்டு வீடுகள் அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்கள் இப்போது வெளியே சந்திக்க முடியும்.

டென்னிஸ் மைதானங்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டு வசதிகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன.

மேலும், திருமணங்களும் மீண்டும் நடைபெறும். இதில் ஆறு பேர் வரை கலந்து கொள்ளலாம்.

எனினும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘எல்லோரும் தொடர்ந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். அழைக்கப்படும் போது தடுப்பூசி போட முன்வர வேண்டும்’ என கூறினார்.