ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய்!
|
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பேசிய அவர், முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். |
|
எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர், போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |