புதிய ஆயுதத்தை களமிறக்கிய புடின்!
ரஷ்யா எதற்கு தயாராக இருப்பதாக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உள் பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து இதற்கு ரஷ்யா பதிலடி தாக்குதலை முன்னெடுத்தது. அந்த வகையில் இன்று உக்ரைன் நகரான டினிப்ரோ மீது ரஷ்யா துல்லிய தாக்குதல் நடத்தியது. |
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (intercontinental ballistic missile) போரில் முதல் முறையாக பயன்படுத்தியதாக உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் தகவல் தெரிவித்தன. இந்நிலையில் ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி புடின் வழங்கிய உரையில், இன்று உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை”(new intermediate-range ballistic missile) பயன்படுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புதிய ஏவுகணையானது வினாடிக்கு 2.5 முதல் 3 கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா பயன்படுத்திய இந்த ஏவுகணையானது உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் முன்பு தெரிவித்த தகவலில் இருந்து முற்றிலும் வேறானது. இதனுடன் உரையில் ஆயுத உதவி வழங்கி வரும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி நேரடி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க “எந்தவொரு தூரத்திற்கும் முன்னேற தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய இந்த தாக்குதலானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தியதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் புடின் விவரித்தார். |