மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!
22.12.2025 15:13:15
மொஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) திங்கட்கிழமை காலை ஒரு காரின் கீழ் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் இறந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
சர்வரோவ் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக இருந்தார் என்று குழு மேலும் கூறியது.
இந்த தாக்குதலுக்கு உக்ரேனின் உளத்துறைகளின் ஈடுபாடு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனினும், இது குறித்து உக்ரேன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.