
ஓடிடியில் வெங்கடேஷ் - ராணாவின் வெப்சீரிஸ்
12.08.2021 07:35:55
தெலுங்கில் அசுரன் படத்தின் ரீமேக்கான நாரப்பாவில் நாயகனாக நடித்தார் வெங்கடேஷ்.
தியேட்டருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்துள்ள திரிஷ்யம்-2 படமும் ஓடிடியில் வெளியாகப்போகிறது.
இந்த நிலையில், வெங்கடேஷ் - ராணா இருவரும் இணைந்து ஒரு வெப்சீரிஸில் நடிக்க தயாராகியுள்ளனர். மல்டி ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் வெப்தொடர் என்பதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தாங்கள் வெளியிடுவதாக இப்போதே அவர்களுடன் டீல் போட்டுள்ளது.