நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது
”எமது நாட்டின் வரி விதிப்பின் மூலம் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால், எமது பொருளாதாரம் விரிவடையவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தளர்வான ஒரு வரிக்கொள்கையே எமக்குத் தேவை.எமது மத்திய வங்கி ஆளுனர் பொருளாதாரத்தை சுருக்கி வைத்துள்ளதுடன், வட்டி வீதத்தை அதிகரித்தல், பாரியளவில் வரி விதித்தல், இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளால் பொருளாதாரத்தைச் சுருக்கியுள்ளார் .
எமது திட்டம் பொருளாதாரத்தை விரிவாக்குவதாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும்.
அத்துடன், தம்மிடம் இருக்கின்ற கொழும்பினை மையப்படுத்திய பொருளாதாரத்தினை கிராமிய மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். அத்துடன் புதிய பொருளாதார தோற்றுவாய்களை கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்” இவ்வாறு அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.