
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம்!
11.09.2025 09:53:26
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இடம்பெற்றிருந்தது.
பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், திருமதி கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால் நினைவுகளையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகரசபை பிரதி மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.