முதல்வர்கள் மாநாட்டில் விஜய் பேசியது என்ன?.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் சொல்லியும் கர்நாடக அரசு இதுவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. இந்நிலையில்தான், இன்று தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு சென்னை கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் விஜய் ‘காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீரப்பை மதிக்க வேண்டும். மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்’ என பேசினார். மேலும் ‘பெங்களூரு மெட்ரோவை ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி கொடுக்கவேண்டும், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
கடல்சார் பொருளாதாரத்திற்கு புதிய திட்டமிடல் அவசையம். தென் மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவை.. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்’ எனவும் பேசினார்.