மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் தாக்குதல்.

19.06.2026 08:10:56

உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் வரலாற்றிலேயே மிகப்பாரிய ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலின் போது மொஸ்கோவிலுள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், நகரின் நான்கு பிரதான விமான நிலையங்களின் செயற்பாடுகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் ஏவப்பட்ட 550  இற்கும் மேற்பட்ட உக்ரைனிய ஆளில்லா விமானங்கள்  வழிமறித்து அழிக்கப்பட்டுள்ளன என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் குறைந்தது 194 ஆளில்லா விமானங்கள் மொஸ்கோ நகரை நோக்கியே ஏவப்பட்டிருந்தன என்று குறிப்பிட்ட அவர்கள், இத்தாக்குதல்களினால் சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.