இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவு

22.03.2022 07:51:41

இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது.

அதன்படி முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.

அதேவேளை பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.