தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு!

29.03.2024 07:08:23

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் தேவாலய ஆராதனையில் பங்கேற்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவினர் கபோரோனில் இருந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் உள்ள பாறையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் தப்பியதாகவும், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.