கடலோர மாவட்டங்களில் கனமழை

06.11.2021 08:52:53

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை முதல் குமரி வரை 14 கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.