வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
07.08.2021 15:21:56
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வீரர் பஜ்ரங் புனியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். 65 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் டவுலெட் நியாஸ்பெகோவை 8 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.