எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்?

06.01.2026 14:39:34

2021 முதல் நடந்து வரும் திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள துறை வாரியாக நடந்துள்ள ஊழல் பட்டியல் குறித்து பார்க்கலாம். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் புகார் அளித்துள்ளார். இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார்.

அந்த சந்திப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல் பட்டியலை வெளியிட்டார். அப்போது திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறைகளிலும் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள தகவல்களை பார்க்கலாம்.

அதன்படி,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ.64 ஆயிரம் கோடி

ஊரக வளர்ச்சித்துறை - ரூ.60 ஆயிரம் கோடி

எரிசக்தித் துறை - ரூ.55 ஆயிரம் கோடி

டாஸ்மாக் துறை - ரூ.50 ஆயிரம் கோடி

பத்திரப்பதிவுத் துறை ரூ.20 ஆயிரம் கோடி

நெடுஞ்சாலைத் துறை - ரூ.20 ஆயிரம் கோடி

நீர்வள ஆதாரத் துறை - ரூ17 ஆயிரம் கோடி

சென்னை மாநகராட்சி - ரூ.10 ஆயிரம் கோடி

பள்ளிக் கல்வித்துறை - ரூ.5 ஆயிரம் கோடி

சுகாதாரத் துறை - ரூ.5 ஆயிரம் கோடி

வேளாண் துறை - ரூ.5 ஆயிரம் கோடி

சமூக நலன் துறை ரூ.4 ஆயிரம் கோடி

உயர்கல்வித் துறை - ரூ.1,500 கோடி

இந்து சமய அறநிலையத் துறை - ரூ.1,000 கோடி

ஆதிதிராவிடர் நலத் துறை - ரூ.1,000 கோடி

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை - ரூ.750 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - ரூ.500 கோடி

சிறைத்துறை - ரூ.250 கோடி பால்வளத்துறை - ரூ.250 கோடி