பாக்.இடைக்கால பிரதமராக குல்சார் அகமது நியமனம்

04.04.2022 18:22:20

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் பாக். இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது நியமிக்கப்பட்டார்.