கவுதம் கார்த்திக் உடன் இணைந்த பாலா பட நடிகை..
இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கிரிமினல் போஸ்டர் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' திரைப்படத்தில் 'அவன் இவன்', 'தெகிடி' போன்ற படங்களில் நடித்த ஜனனி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.