164 தொகுதிகளில் அதிமுக போட்டி!
|
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 164 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அக்கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்று அதிமுக ஐடி விங்கை சேர்ந்த நபர் ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறு. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. |
|
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிடும் என சொல்லப்படுகிறது. அதிமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறதாம். அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் முதல் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 95 சதவீதம் உறுதி செய்யப்பட்ட பட்டியல் என்றாலும் இதை அதிகாரப்பூர்வமாக கருத முடியாது. |