ஜெம் வீரமணி வழக்கு மூவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!

01.10.2026 15:01:08

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரது நண்பர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

 

அதோடு, இந்த வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில், 23 ஆண்டுகளாக வீரமணியின் நிறுவனமான ஜெம் கிரணைட்ஸில் பணிபுரிந்து, தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் கணேசன் என்பவரும் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் போக்சோ வழக்கில் சிறையில் உள்ள ஜெம் வீரமணி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. அதே போன்று இந்த வழக்கில் தொடர்புடைய சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.