பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று நீதிமன்றுக்கு!

01.08.2021 05:27:02

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வெலிக்கடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாடகி உமாரியா சிங்கவங்ஸ பயணித்த சிற்றுந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பாடகி உமாரியா சிங்கவன்ஸ இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிக்கடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.