மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடரும்
26.12.2021 16:00:00
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடரும் மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வருகின்ற 1ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.