தங்கம் தேடும் பணி நிறுத்தம்!

27.02.2024 08:27:53

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திசெல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன் இணைந்து வேதாளை கடலில் ரோந்து படகில் மறைந்திருந்தனர்.