நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

25.03.2025 08:08:26

நியூசிலாந்தின் தெற்கு தீவில் செவ்வாய்க்கிழமை (25) 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் நியூஸிலாந்து நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு ஏற்பட்டது.

இது ஸ்னேர்ஸ் தீவுகளுக்கு வடமேற்கே 155 கி.மீ தொலைவில் 12 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் (NEMA) சுனாமி அபாயத்தையும் தூண்டியது.

நிலநடுக்கத்தினால் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

எனினும், கடலோரப் பகுதி கரைகள் “வலுவான மற்றும் அசாதாரண நீரோட்டங்கள் மற்றும் கணிக்க முடியாத அலைகளை” எதிர்கொள்ளக் கூடும் என்று NEMA எச்சரித்தது.

எவ்வாறெனினும், வெளியேற்றங்கள் குறித்த உத்தரவுகள் இதுவரை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், மக்கள் கரையோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.