பிரம்மாண்ட வீடு, ராணி வாழ்க்கை - நடிகை ரோஜா

05.12.2023 04:47:26

90களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை ரோஜா (Actress Roja) தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். நடிகை ரோஜா 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸ் முடித்த நடிகை ரோஜா சினிமாவில் வருவதற்கு முன் குச்சுப்புடி நடனக்கலைஞராக இருந்தார்.

 

இதையடுத்து,1991 ஆம் ஆண்டு 'பிரேம தப்பாஸு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அதன் பின் செம்பருத்தி படத்தில் நடித்த ரோஜா இயக்குநர் செல்வமணி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார், மேலும் இவர் ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.