3 முன்னணி நாடுகள் கூட்டு முயற்சி.

30.06.2025 07:50:34

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டணியில் புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானம் உருவாக்கப்படவுள்ளது. பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் Edgewing என்ற பெயரில் புதிய கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன. Global Combat Air Programme (GCAP)-இன் கீழ் BAE Systems (UK), Leonardo (Italy) மற்றும் Japan Aircraft Industrial Enhancement Co. (Japan) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6-ஆம் தலைமுறை விமான போர்திறன் அமைப்பை வடிவமைக்க உள்ளன.

Edgewing நிறுவனத்தின் தலைமையகம் பிரித்தானியாவின் Reading நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஜப்பானிலும் முக்கிய மையங்கள் அமைக்கப்படும்.

இந்த திட்டத்தின் இயக்குநராக மார்கோ ஸாஃப், Leonardo நிறுவனத்தின் முன்னாள் மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விமானம் 2035-க்குள் செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. 2070-க்கும் அதற்குப் பிறகும் தொடர்ந்து பயன்படக்கூடியதாக இது வடிவமைக்கப்படும்.

புதிய விமானம், தற்போதைய ரேடார்களைவிட 10,000 மடங்கு அதிகமான தரவுகளை செயல்படுத்தக்கூடிய சென்சார்கள் கொண்டு இருக்கும்.

இதே வேளையில், புதிய விமானம் உருவாகும் வரை இடைநிலையான பாதுகாப்பு தேவைக்காக ஜப்பான், அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை மேலும் வாங்க திட்டமிட்டுள்ளது.

Edgewing திட்டம் மூன்று நாடுகளும் பாதுகாப்பு துறையில் முன்னேற உதவுவதோடு, உலகளாவிய பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு நிலையான வழிமுறையாக அமையும்.