
ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக பதற்றம்.
பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் 80வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிற நிலையில் இந்த கூட்டம் எதிர்வரும்29ம் திகதி நிறைவு பெறுகிறது.
இதேவேளை, இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் உரை நிகழ்த்தி வருகின்ற நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி, பங்களாதேஷின் இடைக்கால அரசின் முகமது யூனுஸுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின்னர் பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன்
முகமது யூனுஸ் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும் அதனால் பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் முகமது யூனுஸ் அதிகாரத்தை விட்டு செல்ல வேண்டும் எனவும் பங்களாதேஷில் மீடனும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இதனால் ஐ.நாவுக்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.