ஜி20-யில் இருந்து ரஷ்யா நீக்கம்
சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இருபது உலக நாடுகள் (ஜி 20) மற்றும் அதன் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களைக் கொண்ட கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை உள்ளன. ஏற்கனவே ரஷ்யா மீது பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகள் பல தடைகளை விதித்து வரும் நிலையில், ஜி20 நாடுகளும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்துள்ளதால் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் மதிப்பீடு செய்து வருகின்றன. ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ரஷ்யாவை தொடர்ந்து வைத்திருந்தால், இந்த அமைப்பு அதன் பலன்களை இழக்கும் என்று அந்த நாடுகள் மதிப்பீடு செய்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.