தாயை கொன்ற கொடூர மகனுக்கு மரண தண்டனை

01.10.2021 17:16:49

தாயை கொன்ற மகனுக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மறவப்பட்டியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

2018ல் தனது தாயார் திலகராணியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஆனந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.