மறைந்த பிரபலங்களுக்கு ஏன் அஞ்சலி செலுத்துவதில்லை?
பொதுவாகவே இசைஞானி இளையராஜா சினிமா துறையில் தனக்கு நெருக்கமானவர்கள் காலமாகும் போது நேரில் சென்று அஞ்சலி செலுத்த மாட்டார்.. சில சமயங்களில் இரங்கல் தெரிவித்து வீடியோ மட்டும் வெளியிடுவார்.. அவரின் நெருங்கிய நண்பர் பாரதிராஜா காலமான போது அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், தேனியில் பாரதிராஜாவின் உடல்அடக்கம் செய்யப்பட்டபோது இளையராஜா அங்கே செல்லவில்லை..
அதேபோல் சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா காலமானபோது இளையராஜா நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதோடு ஒரு இரங்கல் செய்தியை கூட அவர் வெளியிடவில்லை. வழக்கமாக இது போன்ற சம்பவங்களுக்கு வீடியோ போடும் இளையராஜா தேவாவின் மரணத்திற்கு எந்த வீடியோவும் போடவில்லை.
எனவே, ரசிகர்கள் பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில்தான், மறைந்த இசைக் கலைஞர் சந்தானத்திற்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்புவதில்லை.. அவர்கள் என்னுடன் வாழ்ந்தவர்கள்.. என் உணர்வுடன் கலந்தவர்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.