ஓடிடியில் சாதனை படைத்த ''தி கேரளா ஸ்டோரி'

20.02.2024 10:05:00

 

சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் 5 ஆம் தேதி ரிஸீஸான படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் ரிலீஸாகி  பெரும் சர்ச்சையை சந்தித்தது.
 

கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

 

 

இருப்பினும் இப்படம் பல சர்ச்சைகள் தடைகளை தாண்டி வசூல் சாதனை படைத்தது.

 

'

 

 

திரையரங்குகளில் வசூலை வாரிக் குவிளத்த தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியானது.
 

இந்த நிலையில் ஜீ ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் 3 நாட்களில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்ட்ரீங் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ஜீ5தளம்  தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளன