காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய சாக்‌ஷி

14.02.2021 11:06:45

நடிகை சாக்‌ஷி அகர்வால், காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி உள்ளார்.

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி, காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொருத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது தான். இந்தாண்டு நான் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அவர் கூறினார்