“கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது".
|
சொந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது என தவெக தலைவர் விஜய் பற்றி பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் அரசியல் கட்சியை தொடர்ந்து நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். தவெகவில் பதவி கிடைக்காமல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக தொண்டர் அஜிதா ஆக்னஸ் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். |
|
அது போல் கட்சி நிர்வாகி மிரட்டியதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகியும் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' பட ஆடியோ ரிலீஸ் விழாவுக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சியினர் விமரித்து வருகின்றனர். கனவு கூட்டணியை இந்நிலையில், துாத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார், "த.வெ.க தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்திக்காத அந்த கட்சி, தற்போதுதான் களத்திற்கே வந்துள்ளது. தங்களின் கொள்கை, கோட்பாட்டை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். முழுமையான அரசியல் கட்சி தலைவராக விஜய் இருப்பாரா? அரசியல் கட்சியை நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும். தவெக தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சியின் பெண் நிர்வாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் காரை மறித்தபோது மனிதாபிமான அடிப்படையில், கீழே இறங்கி இரண்டு வார்த்தைகள் விஜய் பேசி இருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். சொந்த கட்சி நிர்வாகிகளின் குறையை கேட்பவர்தான் நாயகனாகவும், கட்சி தலைவராகவும் இருக்க முடியும்." என்றார். மேலும் பேசிய சரத்குமார், "தமிழகத்தில் போதை பழக்கத்தால் குற்றச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் பாஜகவிடம் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலை செய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். 50 வயது விஜய்க்காக உருகிய 50 ஆண்டு அரசியல் அனுபவசாலி செங்கோட்டையன்" திமுக எந்த நல்ல திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றன. நல்ல திட்டங்களை வரவேற்காமல், அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். |