தொடர்ந்தும் ஐரோப்பாவினை அச்சுறுத்தும் கொரோனா

10.02.2021 09:04:37

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 33 இலட்சத்து 60 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18 ஆயிரத்து 870 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 508 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் 23 இலட்சத்து 02 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 05 ஆயிரத்து 725 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 674 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று இத்தாலியில் 26 இலட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 10 ஆயிரத்து 630 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 422 பேர் உயிரிழந்துள்ளனர்.