காஸா பகுதியில் ஆபத்தான தோல் நோய் ஆபத்து

04.07.2024 08:15:50

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் சிவப்பு புள்ளிகள் தோன்றுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அத்துடன் இந்நோயின் நிலை தீவிர தொற்று நோயாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காசாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் 150,000 க்கும் அதிகமானோர் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக தோல் நோய்களை உருவாக்கியுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன