ராம் சரண் படத்தில் விஜய் சேதுபதி
07.04.2024 00:31:58
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி. இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதுடன், முன்னணி ஹீரோக்களின் படத்தில் முக்கிய கேரக்டரிலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.
பல இயக்குனர்கள் விஜய்சேதுபதியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தற்போது மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ராம்சரண் நடிக்கும் அவரது 16 வது படத்தில் பவர்ஃபுல் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதியை அணுகினராம். அப்போது விஜய் சேதுபதி ரூ.20 கோடி சம்பளம் கேட்டு படத் தயாரிப்பு நிறுவனத்தை அதிரவைத்துள்ளாராம்.
இப்படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.