
அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்.
அமெரிக்காவில் குர்பிரீத் சிங் என்ற சீக்கிய பொலிஸார் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் சீக்கிய தற்காப்பு கலையான “கட்கா” வை செய்த 36 வயதான சீக்கியர் குர்பிரீத் சிங் காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூலை 13ம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ளது. |
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி, பிகியூரோவா தெரு மற்றும் ஒலிம்பிக் பவுல்வர்டு பகுதியில் ஆண் ஒருவர் கத்தியை சுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஆண் ஒருவர் இந்திய தற்காப்பு கலையில் பயன்படுத்தப்படும் “கண்டா” என்ற இருபுறம் கூர்மையான ஆயுதத்தை சுற்றிக் கொண்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துமாறு செயல்பட்டுள்ளார். ஆயுதத்தை கீழே போடுமாறு பொலிஸார் பலமுறை அறிவுறுத்தியும், குர்பிரீத் சிங் அதை கேட்கவில்லை. மேலும் காவல்துறை அவரை அணுகிய போது அவர்கள் மீது பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். பின்னர் பொலிஸார் மடக்கி பிடித்ததும், அவர்களை நோக்கிய வாளுடன் ஓடிய நிலையில், இறுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுடப்பட்டார். துப்பாக்கி காயங்களுடன் குர்பிரீத் சிங் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. |