பா.ஜ.க மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச் சாட்டு!

27.03.2024 08:22:44

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றையாவது செய்துள்ளதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதன்படி பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, முதன் முதலாக 1951-ம் ஆண்டு நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் திருத்தி அமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை, காலை சிற்றுண்டி வழங்கியது, மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் போன்றவைதான் சமூக நீதி. காலை உணவுத் திட்டம் தற்போதைய முதலமைச்சர்களுக்குக் கூட தோன்றாத யோசனை என்றும் அவர் குறிப்பிட்டார்.