ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கூடும் கொரோனா
:ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 நாட்களாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனியில் டெல்டா வகை கொரோனா அதிகரித்து வருகிறது. உக்ரைன், ஆஸ்திரியா, ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு டெல்டா வைரஸ் இருந்தது.போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 235 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு 97 ஆயிரத்து 198 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 6240 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் 3230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் ரஷ்யாவில் 1237 பேர் இறந்துள்ளனர். இதுவரை அங்கு 2 லட்சத்து 51 ஆயிரத்து 691 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சுற்றிலும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பிரான்ஸ் கொரோனா 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.