காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் தான் தெற்காசியாவில் அமைதி நிலவும்

13.10.2021 14:12:23

'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த சிஐசிஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது. சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று (அக்., 12) கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். பருவநிலை மாற்றம், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்' என்றார்.