திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ரசிகரும், குஷ்புவின் பதிலும்

22.08.2021 15:09:00

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல இளம் நடிகைகள் ஓணம் புடவையை அணிந்து விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். ஆனால், அந்த இளம் நடிகைகளின் புகைப்படங்களை எல்லாம் மீறி நேற்று சமூக வலைத்தளங்களில் குஷ்புவின் புகைப்படங்கள்தான் வைரல் ஆனது.

குஷ்பு கடும் உடற்பயிற்சிகளைச் செய்து நன்றாக இளைத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை நேற்று வெளிப்படுத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் வரும் அளவிற்கு வைரலானது. சமூக வலைத்தளங்களிலும் பலர் குஷ்புவின் மாற்றத்தைப் பற்றித்தான் பேசினர்.

இந்நிலையில் ஒரு குறும்புக்கார ரசிகர், “உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம்,” என கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு குஷ்பு, “ஓ...ஓ...சாரி, நீங்கள் லேட். துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் 21 வருடங்கள் லேட். இருந்தாலும் எனது கணவரிடம் கேட்கிறேன்,” என பதிலளித்துள்ளார்.