
வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்!
14.05.2025 07:07:00
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து தற்போது அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்துவிட்டார். |
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. அதில் சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். ரஜினி கமல் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் தனது வீட்டில் ஐசரி கணேஷ் மகளுக்கு விருந்து வைக்க இருப்பதாக கூறி இருக்கிறாராம். விஜய் திருமண நிகழ்ச்சிக்கு வராத நிலையில் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறாராம். |