67 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

16.10.2024 08:00:49

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓகோட்ஸ்க் கடலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் தத்தளித்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

46 வயதுடைய மைக்கேல் பிச்சுகின் என அடைாயளம் காணப்பட்ட ரஷ்ய நபரே இவ்வாறு மீட்கப்பட்டவர் ஆவார்.

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அவர் புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,000 கி.மீ. (620 மைல்) தொலைவில் இருந்து மீன்பிடி படகு குழுவினரால் இவர் மீட்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அவரது 49 வயதான சகோதரர் மற்றும் அவரது 15 வயதுடைய மருமகன் உயிரிழந்த நிலையில் சடலங்களாக படகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஓகோட்ஸ்க் கடலில் திமிங்கலங்களைப் பார்க்க ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவுப் பொருட்களையும் குடிநீரையும் எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மைக்கேல் பிச்சுகின் உயிர் பிழைத்ததற்கு அவரது எடை ஒரு காரணியாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மைக்கேல் பிச்சுகின் கடல் பயணத்திற்குச் சென்றபோது அவரது எடை 100 கிலோ கிராம் (15st 10lb) ஆக இருந்துள்ளது.

மேலும் 67 நாட்களுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டபோது அவரது எடை அதில் பாதியாக இருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.