பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் தனது மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்தார்!

06.01.2024 15:22:36

கரீபியன் தீவு அருகே  இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் (Christian Oliver) ஒலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார்.


பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஒலிவர் (Christian Oliver), ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர்.

கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கிப் சென்றுள்ளனர்.

விமனம் புறப்பட சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்த 51 வயதுடைய கிறிஸ்டின், மகள்கள் 12 வயதுடைய அனிக் (Annik) , 10 வயதுடைய மடிடா லிப்சர் (Madita), விமானி ராபர்ட் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.