819 தியேட்டர்களில் வெளியாகும் கோடியில் ஒருவன்

17.09.2021 12:59:32

 

பன்முக திறமைக்கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. 'மெட்ரோ' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ராஜா தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார். இந்த படம் தென்னந்தியாவில் மொத்தம் 819 திரையரங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை 18, செங்கல்பட்டு 73, வட மற்றும் தென் ஆற்காடு 73, கோவை 55, மதுரை 43, திருச்சி 32, சேலம் 55, திருநெல்வேலி 18, கர்நாடகா 125, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 327 திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.