அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.

25.02.2026 11:57:53

2026 சட்டமன்ற தேர்தலில் குறி வைத்து அதிமுக - பாஜக ஒன்றாக கூட்டணி அமைத்திருக்கின்றன.. அதிமுகவை பொறுத்தவரை இது அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவை பொறுத்தவரை இது தேசிய ஜனநாயக கூட்டணி என சொல்கிறார்கள்.
அதாவது இந்த கூட்டணிக்கு இரண்டு தலைமை.

இந்த கூட்டணியில் உள்ள சில கட்சிக்ள் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுகின்றன.. டிடிவி தினகரன் போன்ற சிலர் பாஜகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுகிறார்கள்.. பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, நயினர் நாகேந்திரன் ஆகியோர் இதை அதிமுக கூட்டணி என்று சொல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள்..

ஒருபக்கம் பாஜகவிற்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.. இந்த முறை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடம் பாஜக கொடுத்திருக்கிறதாம்.. அதில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.. எடப்பாடி பழனிச்சாமி இதைபற்றி விரைவில் முடிவெடுப்பார் என தெரிகிறது..