பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது

11.03.2022 16:32:00

பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இச்சம்பவம் Seine-et-Marne மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு Nemours மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்குச் சென்ற மாணவர்கள், நேற்று மீண்டும் பரிசுக்கு திரும்பியுள்ளனர். பேருந்து Seine-et-Marne மாவட்டத்தில் வந்துகொண்டிருக்கும் போது திடீரென பேருந்து தீப்பிடித்துள்ளது.

பேருந்துக்குள் 35 மாணவர்கள் இருந்ததாகவும், உடனடியாக அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. பேருந்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.