இந்திய கடற்படையால் இலங்கையை சேர்ந்த 02 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையால் கைது செய்யபட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாம் மூலமாக பெறப்பட்ட இலங்கையை சேர்ந்த நிமலதாஸ் 24/21த. பெ குல வீரசிங்கம்ஆதி கோவிலடி தெரு வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம். கஜிபன் 23/21த. பெ தர்மராஜ் ஆதி கோவிலடி தெரு,வல்வெட்டித்துறை.யாழ்ப்பாணம் ஆகிய இருவரும் 21.10.21 அன்று தங்களது ஊரில் இருந்து ஓ. எப்.ஆர் .பி(OFRP)-எ-5948 என்ற படகில் மீன்பிடிக்க புறப்பட்டவர்கள் கோடியகரைக்கு கிழக்கே 16.5 என் எம் தொலைவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்திய கடற்படையால் (IN SHIP INS BANGARAM) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 22.10.21 அன்று 17.30 மணிக்கு கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் கடற்படை யால் 23.10.21 இரவு 01.00 மணிக்கு வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.
வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய குற்ற எண் 11/21 யூ/எஸ் 3/10, 7/14 எம் சட் ஐ எசிரி 1981 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதி துறை நடுவர் முன் ஆஜர்படுத்தபட உள்ளனர்.