வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் கார்டினல் கெவின்

23.04.2025 14:04:00

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, வத்திக்கானின் தற்காலிகத் தலைவராக கார்டினல் கெவின் ஃபாரெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை கார்டினல் ஃபாரெல் கமர்லெக்னோவாகப் பணியாற்றுவார்.

1947 ஆம் ஆண்டு டப்ளினில் பிறந்த கார்டினல் ஃபாரெல், ஸ்பெயினில் உள்ள சலமன்கா பல்கலைக்கழகத்திலும், ரோமில் உள்ள போன்டிஃபிகல் கிரிகோரியன் பல்கலைக்கழகத்திலும் பயின்றார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

தற்போது பதவியில் உள்ள 252 கார்டினல்களில் 138 தகுதி வாய்ந்த உறுப்பினர்களின் வாக்குகளால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்.