மீண்டும் பிரபுதேவாவுடன் கூட்டணி அமைக்கும் விஜய்

17.11.2021 07:52:19

 

தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66-ஆவது படத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் தனது முதல் படமே தெலுங்கு ரசிகர்களை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ண கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதன் காரணமாகவே திரைக்கதையில் நிறைய வித்தியாசம் காட்ட வேண்டும் என்று இயக்குனரை கேட்டுக் கொண்டு வரும் விஜய், நடனத்திலும் பல புதுமைகளைப் புகுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களுக்கு பிரபுதேவாவை நடனம் அமைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் அதிரடியாக நடனமாட கூடியவர்கள். ஆகவே அவர்களை மிஞ்சும் வகையில் வித்தியாசமான நடனத்தை கொடுத்து தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து உள்ளாராம் விஜய். அதன் காரணமாகவே விஜய்க்கு மிக வித்தியாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய நடனத்தை கம்போஸ் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா.