எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே !

22.05.2022 09:50:46

  நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள். உண்மைபுரியும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதிலளித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வார்த்தை போராக மாறியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளம் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? அவர்தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்தவர் அவர்தான் என்று கடுமையாக சாடினார்.

சீமானின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், அதுமட்டுமின்றி சீமானின் உருவ பொம்மையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சீமான் ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ளார்.

அதில், ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது?

நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே.. அதற்கு என்ன சொல்வது?

நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள். உண்மைபுரியும் என தெரிவித்துள்ளார்.