ஜேர்மனிக்குப் புறப்பட்டார் ஜனாதிபதி அனுர!

11.06.2025 08:10:12

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமாலை ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது.இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, பெடரல் அரசின் முதலமைச்சர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.